Reviews

Aqua Rose Water 100ml
Aqua Rose Water 100ml

5
Mention ur full ingredients in all products please.. ...»
Iluppai ennai (iluppai oil) - 100 ml
Iluppai ennai (iluppai oil) - 100 ml

5
You have many of the herbal oils. When do you thin.. ...»

Maruthani-Powder-(Hennapowder) -50gm
மருதாணி பவுடர் -50gm

Price: Rs.35.00
Availability:  In Stock
0 reviews  (0 reviews)   |   Write a review

மருதாணியின் பயன்கள் 

மருதாணி  பொடியுடன் எலுமிச்சம்பழச்சாறு, கலந்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் தணியும். 

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு மருதாணி மருதாணி  பொடியுடன்  நொச்சி பொடியை சேர்த்து கொள்ளலாம்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் 

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது. மருதாணி பொடியுடன் சிறிது  சியக்காய் சேர்த்து பூசி குளித்து வர விரைவில் கருந்தேமல் மறையும்.

மருதாணி கிருமி  நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு மருதாணி  பொடியுடன் எலுமிச்சம்பழச்சாறு, கலந்து பூசி அழகூட்டுவார்கள். 

புண்கள்
ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு  மருதாணி  பொடிyaiயை நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம். பேஸ்ட் செய்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும்  பற்றிடலாம்.

முடிவளர 
இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு 100 கிராம் போட்டு மருதாணி  பொடி சூடுபடுத்தவும் .  மருதாணி எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம்.. இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.


கால் ஆணி 
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி யுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும். 

படைகள் 
கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். மருதாணி பொடியுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம். 

இளநரையை போக்கும் மருதாணி 
இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.
 

மருதாணி பவுடர் - கால் கிலோ, 
கடுக்காய் பவுடர் - 25 கிராம், 
துளசி பவுடர் - 25 கிராம், 
நெல்லிக்காய் - 50 கிராம், 
டீத்தூள் டிகாஷன் - 50 கிராம், 
2 எலுமிச்சை பழங்களின் சாறு, 
யூகலிப்டஸ் ஆயில் - 4 துளி, 
ஆலிவ் ஆயில் - 4 டீஸ்பூன்.... 

இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள். இதை ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மூன்று அல்லது நான்கு மாதம் வரை கெடாது. இந்த `பேக்'கை வாரம் ஒரு முறை தலைக்குப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். 

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்

       ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நான்கு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின்னர் அதனை மெல்லிய வெள்ளைத் துணியில் கொட்டி வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும். ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்

       விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கெட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.

 

Write a review

Your Name:
Your Review:
Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below: