Today Health Tips

கருணைக் கிழங்கு

    கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.

         மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மூல நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும்.

      உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வரவேண்டும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அருகம்புல் பொடி
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

 

நெல்லிக்காய் பொடி
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது.

 

கடுக்காய் பொடி
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

 

வில்வம் பொடி
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.

 

அமுக்கலா பொடி
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

 

சிறுகுறிஞான் பொடி
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

 

நாவல் பொடி
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

 

வல்லாரை பொடி
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

 

தூதுவளை பொடி
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

 

துளசி பொடி
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

 

ஆவரம்பூ பொடி
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

 

 

கண்டங்கத்திரி பொடி
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

 

ரோஜாபூ பொடி
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

 

ஓரிதழ் தாமரை பொடி
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும்.

 

ஜாதிக்காய் பொடி
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

 

திப்பிலி பொடி
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.வெந்தய பொடி
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பொடி
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி
வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி
உடல் உஷ்ணம், உள்-வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பொடி
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கைவிதை பொடி
ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர்
குடல்வால் புழுக்களை அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி
சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

கஸ்தூரி மஞ்சள் பொடி
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

 

பஞ்சகற்பம் 
பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் வறட்சி, வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு மற்றும் தோல் நோய்கள் வராமல் தடுப்பதற்கு பஞ்சகற்பம் நல்ல மருந்து. வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சள், கடுக்காய், நெல்லி வற்றல், மிளகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து பசும்பாலில் ஊறவைத்து நன்கு பிசைந்து இரண்டு மணி நேரம் கழித்து தலை முதல் கால் வரை லேசாக அப்பி தேய்த்து குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும்.
நலுங்குமாவு 
பெண் குழந்தைகளுக்கு முகத்தில் முடி வளராமல் தடுக்கவும், முகப்பரு வராமல் தடுக்கவும் வாரம் இரண்டு நாட்கள் நலுங்குமாவு தேய்த்து குளிப்பாட்டலாம். இளவறுப்பாக வறுத்த பாசிப்பயறு, வெட்டி வேர், சந்தனகட்டை, கோரைக்கிழங்கு, கஞ்சியில் ஊறவைத்து காயவைத்த கார்போகரிசி, விளாமிச்சம் வேர், கிச்சிலி கிழங்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தேவையான அளவு பால் சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பொலிவடையும்.இவ்வாறு தேவையான மருந்துப் பொருட்களை நாமே வீட்டில் தயாரித்து வைத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கலாம்.-

 

வேப்பம் வித்தினால் குட்டம், சர்ப்ப விஷங்கள், சந்நி, சொறி, சிரங்கு, மூலம், ஏப்பம், மலத்திலுள்ள சிறுகிருமி முதலியவை போகும். 

சிறுநீரகத்தில் கல் kidney Stone

நாம் குடிக்கும் தண்ணீரிலும் உண்ணும் உணவிலும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரிக் அமிலம், சிஸ்டைன், ஜான்தைன், ஸ்ட்ரூவைட் என்று பல தாது உப்புகள் உள்ளன. சாதாரணமாக இவை சிறுநீரில் கரைந்து வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் எல்லையைத் தாண்டும் போது, அடர்த்தி அதிகமாகிவிடும். இதன் விளைவால், தண்ணீர்க் குழாயில் பாசி சேருகிற மாதிரி இவை சிறுநீரகப்பாதையில் உப்புப்படிகமாகப் படிந்து, மணல் போல் திரண்டு விடும்.

ஆரம்பத்தில் சிறு கடுகு போலத் தோன்றும், நாளடைவில் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு அது வளர்ந்துவிடும். சிலருக்குக் கிரிக்கெட் பந்து அளவிற்கும் கல் உண்டாவது உண்டு.

பொதுவாக, பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களுக்கே சிறுநீரகக்கல் உருவாவதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம். அதிலும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களைவிட வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகமாக வருகிறது. ஆதலால் இவர்கள்தான் சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும் தடுக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வெயில் காலத்தில் வியர்வை மூலம் அதிக நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீரின் அளவு குறைந்துவிடும்.

இதனால் சிறுநீர்ப் பாதையில் சிறுநீரகக்கல் உருவாக வாய்ப்புக் கிடைக்கும்.

இந்தச் சமயத்தில் தினமும்

10 தம்ளர் - அதாவது 2 லிட்டர் - தண்ணீர் குடிக்க வேண்டும்.

அத்தோடு இளநீர், பார்லி நீர், எலுமிச்சைச் சாறு, நீர் மோர், பழரசங்கள் சாப்பிட வேண்டியதும் முக்கியம்.

தினமும் இரண்டு வேளை காபி போதும்.

தேநீர் அறவே வேண்டாம்.

நாளொன்றுக்கு 250 மி.லி. பால் போதும்.

அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைக் குறைத்துக் கொண்டால் நல்லது.

கோக்கில் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆகாது.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பு அதிகம். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.

முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. ஆகையால் இவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.

காய்களில் காரட், பாகற்காய், வாழைப்பூ முதலியவற்றைச் சேர்க்கலாம்